Monday, 25 March 2013

Thozhi kavithai

      என் தோழி

அன்பு தோழியே...
என் நாட்குறிப்பை புரட்டிப்பார்க்கையில்..
உன் அன்பும்,பிரிவும்
எனக்கு வியப்பூட்டுகிறது
உன் பிடிவாதமும்,கோபமும்
எனக்கு சிரிப்பூட்டுகிறது
உன் கண்ணீரும்,அமைதியும்
எனக்கு அழுகை தருகிறது
இப்படி ஒவ்வொரு நிமிடமும்
என் வாழ்க்கையை உன்னுடன் பகிர்ந்த
உன்னை எப்படி மறப்பேன்..
கவலைப்படாதே
நாள்தோறும் உன் நினைவுகளை
என் சுவடில் எழுதிட
வாழ்ந்திடுவேன் மறுப்பிறவியிலும்
உன் அன்பு தோழியாக..!

Sunday, 17 March 2013

       கொள்ளுத்தாத்தா

தமிழினத்திற்கே உரிய
முரட்டு மீசையும்
கூரிய பார்வையும்
கனிந்த இதயத்தையும் கொண்டு
என் தாத்தாவை
மிரட்டிய கொள்ளுத்தாத்தாவை
நினைத்து வியக்கிறேன்..!
என் குழந்தையும்
அவரின் புகைப்படம் கண்டு
அஞ்சி உணவு விழுங்கையில்..!

Friday, 15 March 2013

      வெட்டியான்

சாவு ஒலி கேட்டுபுட்டு
சந்தோஷத்தில பறந்த
என் மனசுக்கு...
உன் சாவுதான்
அறிமுகப்படுத்துனுமா
இந்த உசூரோட வலிய..
என் ராசாவே..!

Thursday, 14 March 2013

kavithai


           மழையில் MCC

கார்காலையில் கதிரவனை முந்திக்கொண்டு
அவசர அவசரமாக கல்லூரிக்குள் நுழைந்த
என்னை வரவேற்க காத்திருந்தது
மழையில் சொட்ட சொட்ட நனைந்த மரங்கள்..!
கால்களின் வேகத்தை நீர்த்த வேர்களினால் பற்றிக்கொண்டு
சில்லென்று தென்றலை வீசிக்கொண்டு
பறவைகளின் கதகதப்பில் கூடுகளை தாங்கிக்கொண்டு
குளுமையான  குகைகளை கிளைகளினால்
ஆகாயத்தின் கீழ் கட்டிக்கொண்டு
கருமேங்களை தொட உயர்ந்த மரங்கள்
அசைந்து அசைந்து  போட்டிப் போட்டுக்கொண்டு
பனியில் நனைந்த மொட்டுகளை மலரச்செய்து
அதனை மலரவிடாமல் தூரல்கள் தடுத்துக்கொண்டு
மனதில் இடைவிடாத சாரல்களை பொழிந்து
முகத்தை நிமிர்த்தி கன்களை விரித்து
பிரமிக்கவைக்கையில்..!
இலையின் நுனியில் தேங்கியிருந்த வெள்ளத் துளிகள்
தொப்பென்று தலையில் விழுந்து
வகுப்பறையை நினைவுப்படுத்தின..!