மாமனிதரின் வலிமை
எது சரி; எது தவறு
என்று தேர்ந்தெடுக்கும் திறனில்
முடிவாகிறது
மனிதனின் வலிமை...!
எது சுகம்; எது துன்பம்
என்று அறியும் மனபோக்கில்
வெளியாகிறது
விலங்கின் வலிமை...!
சரி எனப்படும் சுகத்தை
தேர்ந்தெடுப்பதிலும்
தவறு எனப்படும் துன்பதை
ஓதுக்குவதிலும்
உயர்ந்து நிற்கிறது
மாமனிதரின் வலிமை...!
தனக்கு கிடைக்கும்
யாவையும் சுகமாக்கி;
மற்றவர்களை துன்பத்தில்
ஆழ்த்தும் என்னத்தை
மறப்போம்.
குரங்கிலிருந்து
ஒரு படி மனிதனாய்
உயர்ந்துள்ளோம் என்று..!
உரிய காலத்தில்
சரி எனப்படும் சுகத்தை
தேர்ந்தெடுத்தும்,
தவறு எனப்படும் துன்பதை
ஓதுக்கியும் ,
முன்னேறுவோம்
பரிணாமம் அடைந்த
மாமனிதராய்...!










